தூத்துக்குடியில் நீரிழிவு நோய் கண்காட்சி

தூத்துக்குடியில் நீரிழிவு நோய் கண்காட்சி மற்றும் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
Updated on
1 min read

தூத்துக்குடியில் நீரிழிவு நோய் கண்காட்சி மற்றும் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
 உலக நீரிழிவு  நோய் தினத்தையொட்டி,  தூத்துக்குடி மாவட்ட காவல் துறை அலுவலகத்தில்,  எ ம்பவர் நீரிழிவு  நோய் கல்வி மற்றும் தடுப்புத் திட்டத்தின் சார்பில் நீரிழிவு  நோய் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் இலவச நீரிழிவு நோய் பரிசோதனை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 நிகழ்ச்சிக்கு, எம்பவர் அமைப்பின் செயல் இயக்குநர் ஆ.சங்கர் தலைமை வகித்தார்.  மாவட்ட  கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் கந்தசாமி,  ராஜாராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ. மகேந்திரன் கண்காட்சி மற்றும் பரிசோதனை முகாமை தொடங்கிவைத்துப் பேசினார்.  நீரிழிவு  நோய் மருத்துவர் அருள் பிரகாஷ், நீரிழிவு நோய் குறித்து பேசினார். மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள்,  அமைச்சுப் பணியாளர்கள்,  காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு,  எடை மற்றும் உயரம் (பி.எம்.ஐ.),  ரத்த அழுத்தம்  ஆகிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் நீரிழிவு  நோய் தடுப்பு மற்றும் சிகிச்சையைப் பற்றிய கல்வி,  நீரிழிவு  நோய் உள்ளவர்களுக்கு சிகிச்சை முறை,  உடற்பயிற்சி,  சத்தான உணவுகள் உள்கொள்ளுதல் பற்றிய ஆலோசனை ஆகியவையும் முகாமின்போது இலவசமாக வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com