எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தூத்துக்குடியில் 26இல் கடற்கரை விளையாட்டுப் போட்டி

தூத்துக்குடியில் கடற்கரை விளையாட்டுப் போட்டிகள் அக்டோபர் 26 ஆம் தேதி நடைபெறுகிறது.

News image
Updated On :20 அக்டோபர் 2017, 11:42 pm

DIN

தூத்துக்குடியில் கடற்கரை விளையாட்டுப் போட்டிகள் அக்டோபர் 26 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் லூ. தீர்த்தோஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
 தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தூத்துக்குடி மாவட்டப் பிரிவு சார்பில், 2017-2018 ஆம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான கடற்கரை வாலிபால், கடற்கரை கால்பந்து மற்றும் கடற்கரை கபடி விளையாட்டுப் போட்டிகள் இம்மாதம் 26 ஆம் தேதி முத்துநகர் கடற்கரையில் காலை 7 மணி முதல் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக நடத்தப்பட உள்ளது.
  இதில் ஒரு வாலிபால் அணியில் 2 நபர்களும், கால்பந்து அணியில் 5 நபர்களும், கபடி அணியில் 6 நபர்களும் கலந்து கொள்ளலாம்.   போட்டியில் கலந்து கொள்ளும் அணிகள் அக். 24 ஆம் தேதிக்கு முன்பு தங்கள் அணி குறித்த விவரத்தை தூத்துக்குடி ஜார்ஜ் சாலையில் உள்ள மாவட்ட விளையாட்டு அலுவலரை தொடர்ந்து கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 0461-2321149 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளலாம்.
முன்பதிவு செய்தவர்கள் அக். 26 ஆம் தேதி காலை 7  மணிக்கு முத்துநகர் கடற்கரைக்கு வர வேண்டும். போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத் தொகை வங்கி மூலம் வழங்கப்படுவதால் வீரர், வீராங்கனைகள் தங்களது வங்கி கணக்குப் புத்தகத்துடன் வர வேண்டும்.
போட்டியில் வெற்றி பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு அரசுச் செலவில் அழைத்து செல்லப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.