ஸ்ரீவைகுண்டம் அணைப் பகுதியில் ஏப்.14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, உணவுத் திருவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான இடத்தை மாவட்ட ஆட்சியர் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார். ஸ்ரீவைகுண்டம் மற்றும் கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளிலும், ஸ்ரீவைகுண்டம் அணைப் பகுதியிலும் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஸ்ரீவைகுண்டம் அணைப் பகுதியில் படகு குழாம் அமைப்பதற்கான பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக படகு சென்று வர வேண்டிய தொலைவு, அப்பகுதியில் தண்ணீர் இருப்பு, பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் ஆய்வு நடைபெறும். அதைத் தொடர்ந்து, பேரூராட்சி நிர்வாகத்தினரின் கட்டுப்பாட்டில் படகுகுழாம் செயல்படுத்தப்படும். மேலும், ஏப்.14ஆம் தேதி அணையின் கீழ்பகுதியில் உணவுத் திருவிழா நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் அவர்.
ஆய்வின் போது, சார் ஆட்சியர்(பயிற்சி) லாவான்யா, வட்டாட்சியர் தாமஸ் பயஸ் அருள், சமூக நலப் பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் செல்வபிரசாத், பேரூராட்சி செயல் அலுவலர்(பொ) மணிமொழியன் ரெங்கசாமி, சுகாதார ஆய்வாளர் தியாகராஜன் உள்பட பலர் உடன் சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

7/16: உலகக் கோப்பையில் இருந்து கத்தார், செக் குடியரசு வெளியேற்றம்!

ஓடிடியில் வெளியானது பிளாஸ்ட்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

கடன் வாங்கலாம் ஆனால்..! மத்திய நிதியமைச்சர் சொன்ன பதில்! | BJP
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani


