காவிரி பிரச்னையில் மத்திய அரசு தவறு செய்து கொண்டிருக்கிறது என்றார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான டி.டி.வி.தினகரன்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மதிமுக பொதுச்செயலர் வைகோவின் உறவினர் சரவணசுரேஷ் அண்மையில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
அவரது சொந்த ஊரான கோவில்பட்டியையடுத்த பெருமாள்பட்டியில் உள்ள இல்லத்துக்கு சென்ற டி.டி.வி.தினகரன், அவரது தந்தை ராமானுஜம் மற்றும் உறவினர்களிடம் ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி குளத்தூரில் வாகனப் பிரசாரத்தில் ஈடுபட்ட போது, வைகோ வாகனத்தின் மீது பாட்டில் வீசப்பட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது. காவல் துறை விரைந்து நடவடிக்கை எடுத்து குற்றவாளியை கைது செய்ய வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டிய விஷயத்தில், மத்திய அரசு பெரிய தவறு செய்து கொண்டிருக்கிறது. இதை தமிழக மக்கள் மட்டுமல்ல, இந்திய மக்கள் தட்டிக் கேட்பர் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாமக்கல் அரசு கலைக் கல்லூரியில் ஜூன் 5-இல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

திருச்சி கிழக்கு செல்கிறார் விஜய்! இன்றைய செய்திகள் மே 30 - நேரலை!

பருத்தி இறக்குமதி: சுங்க வரியிலிருந்து தற்காலிக விலக்கு - மத்திய அரசு
நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


