இலங்கையில் அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்றார் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை சுவாமி தரிசனம் செய்ய வந்த அவர், கோயில் விருந்தினர் மாளிகையில் அளித்த பேட்டி:
இலங்கை வடக்கு மகாணத்தில் போர் முடிந்த பிறகும் 1.5 லட்சம் ராணுவ வீரர்கள் அங்கேயே முகாமிட்டுள்ளனர். மேலும், அந்தப் பகுதியில் சிங்களர்கள் மீன்பிடிக்க சட்டத்துக்கு புறம்பாக அனுமதித்துள்ளனர்.
கடந்த 4 ஆண்டுகளில் பொதுமக்களின் நிலங்கள் சுமார் 6 ஆயிரம் ஏக்கர் திரும்பத் தரப்பட்டுள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பு 500 ஏக்கரை அரசு திரும்பி வழங்கியது. ஆனால், இந்திய- இலங்கை உடன்படிக்கையின்படி சில அதிகாரங்கள் இன்னும் தரப்படவில்லை. அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும். பொதுமக்களின் நிலங்களை முழுமையாக திரும்பி ஒப்படைக்க வேண்டும்.
இலங்கை வடக்கு மாகாணத்தில் இருந்து புலம் பெயர்ந்தவர்கள் மீண்டும் வரவேண்டும். இந்திய அரசிடம் காங்கேசன் துறைமுகத்தையும், பலாலி விமான தளத்தையும் நவீனமயமாக்கித் தரவேண்டும் என கேட்டுள்ளோம். செய்து தருவதாக அரசு கூறியுள்ளது. இழுவைப் படகை பயன்படுத்தி மீன்பிடிப்பதை நிறுத்தினாலே இந்திய மீனவர்களுக்கும் இலங்கை மீனவர்களுக்கும் உள்ள பிரச்னைக்கு நிரந்த தீர்வுகாண முடியும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாமக்கல் அரசு கலைக் கல்லூரியில் ஜூன் 5-இல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

திருச்சி கிழக்கு செல்கிறார் விஜய்! இன்றைய செய்திகள் மே 30 - நேரலை!

பருத்தி இறக்குமதி: சுங்க வரியிலிருந்து தற்காலிக விலக்கு - மத்திய அரசு
நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


