தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி 3 சென்ட் அந்தோணியார்புரம் பகுதி மக்கள் தனலட்சுமி தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்:
தங்கள் பகுதியில் வசித்து வரும் பலதரப்பட்ட மக்கள் ஒப்பந்ததாரர்கள் மூலம் ஸ்டெர்லைட் ஆலையில் வேலைவாய்ப்பு பெற்று நல்ல வருமானம் ஈட்டி வாழ்ந்து வந்தோம். நிறுவனம் மூலமாக பல்வேறு உதவிகளும் பெற்று வந்தோம்.
தற்போது ஆலை மூடப்பட்டதால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறோம். எங்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









