ஆங்கிலப் புத்தாண்டையொட்டி ஜனவரி 1 ஆம் தேதி குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூர்த்தீசுவரர் உடனுறை அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயிலில் 1008 பால்குட ஊர்வலம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
இதையொட்டி டிச.31 ஆம் தேதி காலை 10மணிக்கு அம்மனுக்கு மகா சங்கல்பம், மூலமந்திர யாகம், பூர்ணாஹுதி, 108 சங்காபிஷேகம், 108 கலசாபிஷேகம், அலங்கார மகா தீபாராதனை ஆகியன நடைபெறும். மாலை 4.30 மணிக்கு அரசரடி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, மாலை 6.30 மணிக்கு ஏகாதச சஹஸ்ர நாமாவளி அர்ச்சனை, உலக நலன் வேண்டி மகா சங்கல்பம், தேவி சங்கல்பம், மகாத்மிக பாராயணம், மகா ருத்ரம் ,வில்லிசை, பக்தி இசை ஆகியவை நடைபெறும்.
ஜன.1 ஆம் தேதி காலை 6 மணிக்கு மகா கணபதி, மகாலட்சுமி ஹோமம், தனபூஜை, கோபூஜை, கஜபூஜை, 108 கலச பூஜை, ஏகாதச, ருத்ர, சுக்த, துர்கா மகா ஹோமம், மகா தீபாராதனை, சிதம்பரேசுவரருக்கு மகா தீபாராதனை,சிதம்பரேசுவரர் ஆலயத்தில் இருந்து முத்தாரம்மனுக்கு சீர்வரிசை எடுத்து வருதல், சந்தன குடம் பவனி நடைபெறும்.
8 மணிக்கு அறம் வளர்த்த நாயகி அம்மனுக்கு மகா தீபாராதனையைத் தொடர்ந்து, அங்கிருந்து 1008 பால்குட ஊர்வலம் புறப்படும். முக்கிய வீதிகள் வழியே வரும் ஊர்வலம் முத்தாரம்மன் கோயிலை வந்தடைந்தவுடன், பாலாபிஷேகம், 108 கலசாபிஷேகம், 108 சங்காபிஷேகம், மகா அபிஷேகம் நடைபெறும்.பகல் 1மணிக்கு மகா அலங்கார மகா தீபாராதனை,மகுட இசை,வில்லிசை,பிற்பகல் 3 மணிக்கு 108 சுமங்கலி பெண்கள் குலவையிட கும்மி,மாலை 5 மணிக்கு அம்பாள் ஊஞ்சல் சேவை, 6 மணிக்கு 1008 மகா அகல் தீப வழிபாடு, 8 மணிக்கு பைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெறும்.
ஏற்பாடுகளை காமதேனு குழு அபிஷேக வழிபாட்டு மன்றம்,ராஜலட்சுமி வழிபாட்டு மன்றம்,முத்தாரம்மன் தசரா நண்பர்கள் அன்னதானக்குழுவினர் செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சொல்லப் போனால்... நம்பிக்கையில்லா கூட்டணி! என்ன செய்யப் போகிறார்கள்?

பொதுமக்களின் எதிா்பாா்ப்புக்கு ஏற்றாா்போல போலீஸாா் செயல்பட வேண்டும்: சென்னை காவல் ஆணையா் அமல்ராஜ்

வாய்ப்புகள் தேடிவரும் கடக ராசிக்கு! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 07)





