/

கோவில்பட்டியில் மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டிகள் பிப். 10 இல் தொடக்கம்

தூத்துக்குடி மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டிகள் கோவில்பட்டியில் இம்மாதம் 10 ஆம் தேதி தொடங்கி இரண்டு நாள்கள் நடைபெறுகிறது.

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 3:01 am

DIN

தூத்துக்குடி மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டிகள் கோவில்பட்டியில் இம்மாதம் 10 ஆம் தேதி தொடங்கி இரண்டு நாள்கள் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் லூ. தீர்த்தோஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
 தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தூத்துக்குடி மாவட்டப் பிரிவு சார்பில், மாவட்ட அளவிலான ஹாக்கி லீக் போட்டிகள் இம்மாதம் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் கோவில்பட்டி, செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த லீக் போட்டிகளில் கலந்து கொள்ள வயது வரம்பு, நுழைவுக் கட்டணம் கிடையாது. போட்டிகள் ஆண்களுக்கு மட்டுமே நடத்தப்படுகிறது.  இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ள ஹாக்கி அணிகள், தங்கள் அணியில் விளையாடும் வீரர்களின் பெயர்ப் பட்டியல், முகவரி மற்றும் அலைபேசி எண்ணுடன் 8 ஆம் தேதிக்குள் ஹாக்கி பயிற்றுநர் என்.முத்துக்குமாரின் அலைபேசி எண்ணுக்கு (9994641614) தகவல் தெரிவிக்கவும்.
போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்படும். மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடம் பெறும் அணி மண்டல அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளிலும், மண்டல அளவில் முதல் இரண்டு இடங்களை பெறும் அணிகள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளிலும் அரசு செலவில் கலந்து கொள்ளலாம் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.