அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அம்பேத்கர் மக்கள் இயக்கத்தினர் உண்ணாவிரதம்

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் திருச்செந்தூரில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. 

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 3:03 am

DIN

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் திருச்செந்தூரில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. 
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு கோரியும், தமிழகம் முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது விசாரணை இல்லாமல் போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெற கோரியும், வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட தலித் குடும்பங்களுக்கு ரூ. 20 லட்சம் நிவாரணம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் திருச்செந்தூர் தேரடி திடலில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது. 
மாநில துணை பொதுச்செயலர் பத்மநாபன் தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்டச் செயலர் மகேஸ், மாவட்டத்  தலைவர் நடராஜன், செந்தூர்பாண்டியன், திருச்செந்தூர் ஒன்றியத் தலைவர் முனியப்பன், மாவட்ட விவசாயப் பிரிவு செயலர் சித்திரைவேல், விடுதலைச் சிறுத்தைகள் தூத்துக்குடி மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் கன்னிமுத்து, மாநில பொதுக்குழு உறுப்பினர் சைவவேதாந்தபாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
மாநில இலக்கிய அணிச் செயலர் நெல்லை செழியன், வழக்குரைஞர் ராஜாபீமாராவ், விடுதலைச் சிறுத்தைகள் தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலர் முரசு தமிழப்பன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அம்பேத்கர் மக்கள் இயக்க செயல் தலைவர் வழக்குரைஞர் வை. ராமலிங்கம் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். குமாரபுரம் ரமேஷ் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.