டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஆறுமுகனேரியில் கே.டி. கோசல்ராம் 102வது பிறந்த தின விழா

ஆறுமுகனேரியில் சுதந்தி போராட்ட தியாகியும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான கே.டி. கோசல்ராமின்  102ஆவது பிறந்த தின விழா நடைபெற்றது.

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 3:03 am

DIN

ஆறுமுகனேரியில் சுதந்தி போராட்ட தியாகியும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான கே.டி. கோசல்ராமின்  102ஆவது பிறந்த தின விழா நடைபெற்றது.
விழாவுக்கு பேரவையின் மாநிலத் தலைவர் மு. பற்குணபெருமாள் தலைமை வகித்தார். ஆறுமுகனேரி ரெயின்போ சதுரங்க கழக நிறுவனத் தலைவர் ப. முருகேசபாண்டியன் வரவேற்றார். முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் ச. தங்கதிலகா, காங்கிரஸ் தூத்துக்குடி மாவட்ட முன்னாள் துணைத் தலைவர் எஸ்.டி. சண்முகம், தமாகா மாநில செயற்குழு உறுப்பினர் இரா. தங்கமணி, நகர காங்கிரஸ் தலைவர் எல். ராஜாமணி, கே.டி.கே. பேரவை மகளிர் அணி துணைத் தலைவர் பொன்கலைமதி, மகளிர் அணி செயலாளர் செல்வி, துணைச் செயலாளர் விஜயலெட்சுமி ஆகியோர் பேசினர். 
ஆறுமுகனேரி தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மேலாளர் மாரீஸ்வரன் 10 மற்றம் பிளஸ் 2 வகுப்பில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விழாவில் பேரவைச் செயலர் கோசல்ராம், துணைச் செயலர் இசக்கிமுத்து, பொருளாளர் சுந்தரலிங்கம், காங்கிரஸ் கட்சி மாவட்ட பேச்சாளர் சிவகணேசன், வட்டார காங்கிரஸ் தலைவர் கேகே. சற்குரு, முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் முருகேசன், முருகானந்தம், உள்பட பலர் கலந்துகொண்டனர். பேரவையின் பொதுச் செயலர் மரிய ஸ்டாலின் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.