9 இடங்களில் நாளை அம்மா திட்ட முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் 9 இடங்களில் வெள்ளிக்கிழமை (மார்ச் 2) அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டத்தில் 9 இடங்களில் வெள்ளிக்கிழமை (மார்ச் 2) அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் என். வெங்கடேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் அம்மா திட்ட முகாம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களிலும் அந்தந்த வட்டாட்சியர்கள் தலைமையில் வெள்ளிக்கிழமை (மார்ச் 2) நடைபெறுகிறது.
அதன்படி, தூத்துக்குடி வட்டம் தூத்துக்குடி பகுதி - 2, ஸ்ரீவைகுண்டம் வட்டம் அணியாபரநல்லூர், திருச்செந்தூர் வட்டம் குலசேகரன்பட்டினம், சாத்தான்குளம் வட்டம் மீரான்குளம் பகுதி-1, கோவில்பட்டி வட்டம் சிவந்திபட்டி, விளாத்திகுளம் வட்டம் பட்டிதேவன்பட்டி, எட்டயபுரம் வட்டம் என். புதுப்பட்டி, ஓட்டப்பிடாரம் வட்டம் காட்டுநாயக்கன்பட்டி, கயத்தாறு வட்டம் தீத்தாம்பட்டி ஆகிய கிராமங்களில் முகாம் நடைபெறுகிறது.
முகாமின்போது, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்,  பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு - இறப்பு சான்றுகள்,  சாதிச் சான்றுகள் மற்றும் வருவாய்த் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு உடனடியாக நிறைவேற்றப்பட உள்ளதால் பொதுமக்கள் மனுக்களை அளித்து பயனடையலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com