/

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்கள் ரத்து

தூத்துக்குடி மாவட்டத்தில் செப். 5ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெறவிருந்த மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்கள்

Updated On :3 செப்டம்பர் 2018, 11:53 pm

தூத்துக்குடி மாவட்டத்தில் செப். 5ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெறவிருந்த மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்கள் அனைத்தும் நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட  செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து வட்டார வள மையங்களிலும்,  மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அமலாக்கத் துறை அமைச்சகத்தின் சார்பில் செப். 5ஆம் தேதி  தூத்துக்குடி,  7ஆம் தேதி ஆழ்வார்திருநகரி,  11ஆம் தேதி கருங்குளம்,  12ஆம் தேதி கயத்தார்,  14ஆம் தேதி கோவில்பட்டி,  18ஆம் தேதி ஓட்டப்பிடாரம்,  20ஆம் தேதி புதூர்,  25ஆம் தேதி சாத்தான்குளம்,  26ஆம் தேதி ஸ்ரீவைகுண்டம்,  27ஆம் தேதி திருச்செந்தூர்,  28ஆம் தேதி உடன்குடி, 29ஆம் தேதி விளாத்திகுளம் என  நடைபெறவிருந்த மாற்றுத் திறனாளிகளுக்கான 12 சிறப்பு முகாம்களும் நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.