கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

முன்விரோதத்தில் தாக்குதல்: நிலத்தரகர் கைது

கோவில்பட்டி அருகே முன்விரோதம் காரணமாக நிலத்தரகரை தாக்கிய மற்றொரு நிலத்தரகரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். 

Updated On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

கோவில்பட்டி அருகே முன்விரோதம் காரணமாக நிலத்தரகரை தாக்கிய மற்றொரு நிலத்தரகரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். 
கோவில்பட்டி போஸ் நகரைச் சேர்ந்த துரைச்சாமி மகன் நிலத்தரகர் முனியசாமி(55). இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நாலாட்டின்புத்தூரில் உள்ள விவசாய நிலத்தை விலைக்கு வாங்கியிருந்தாராம். இதனால், இவருக்கும், சண்முகசிகாமணி நகரைச் சேர்ந்த செல்லையா மகன் நிலத்தரகர் சேகருக்கும் (50) இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.
இந்நிலையில் முனியாசமி தனது நண்பர்களான ராமையாபாண்டியன், பாண்டியராஜன் ஆகியோருடன் பாண்டவர்மங்கலம் ராஜீவ் நகரில் உள்ள ஒரு இடத்தைப் பார்த்துவிட்டு, பசுவந்தனை சாலையில் உள்ள கறிக்கடை முன் நின்று கொண்டிருந்தனராம். 
அப்போது, பைக்கில் வந்த சேகர், முனியசாமியிடம் தகராறு செய்து அவரை தாக்கினாராம். இதில் காயமடைந்த முனியசாமி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
இதுகுறித்த புகாரின் பேரில், வழக்குப் பதிந்த போலீஸார் நிலத்தரகர் சேகரை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.