தமிழ்நாட்டிற்கு தடையின்றி உரம் வழங்கிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!நீட் வேண்டாம் என்பதே தவெக நிலைப்பாடு: அமைச்சர் அருண்ராஜ்கடும் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நீட் மறுதேர்வு: தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!
/

கோவில்பட்டியில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டியில் இந்து விரோத செயல்களில் ஈடுபட்டு வருவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜகவினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

Updated On :23 ஜனவரி 2019, 5:55 am IST

கோவில்பட்டியில் இந்து விரோத செயல்களில் ஈடுபட்டு வருவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜகவினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  
மாவட்டத் தலைவர் பாலாஜி தலைமை வகித்தார். துணைத் தலைவர் போஸ், மாவட்டப் பொதுச் செயலர்கள் சிவந்தி நாராயணன், ராமமூர்த்தி, சரவணகிருஷ்ணன், பொருளாதாரப் பிரிவு மாவட்டத் தலைவர் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  ஆர்ப்பாட்டத்தில் பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா கலந்துகொண்டு  கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.    இதில், கோவில்பட்டி நகரத் தலைவர் வேல்ராஜா, ஒன்றியத் தலைவர்கள் ராம்கி (கோவில்பட்டி), கணபதி (கயத்தாறு), ஓ.பி.சி. அணி மாவட்டத் தலைவர் வெங்கடேசன் சென்னக்கேசவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.