தூத்துக்குடி மாவட்டத்தில் 10 இடங்களில் வெள்ளிக்கிழமை (ஜன. 25) அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் அம்மா திட்ட முகாம், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் அந்தந்த வட்டாட்சியர்கள் தலைமையில் வெள்ளிக்கிழமை (ஜன. 25) நடைபெறுகிறது.
அதன்படி, தூத்துக்குடி வட்டம் முடிவைத்தானேந்தல், ஸ்ரீவைகுண்டம் வட்டம் ஸ்ரீமுலக்கரை, திருச்செந்தூர் வட்டம் மூலக்கரை, சாத்தான்குளம் வட்டம் நெடுங்குளம், கோவில்பட்டி வட்டம் திட்டங்குளம், விளாத்திகுளம் வட்டம் கவுண்டன்பட்டி, எட்டயபுரம் வட்டம் சிதம்பராபுரம், ஓட்டப்பிடாரம் வட்டம் மலைப்பட்டி, கயத்தாறு வட்டம் பணிக்கர்குளம், ஏரல் வட்டம் மழவராயநத்தம் ஆகிய கிராமங்களில் முகாம் நடைபெறுகிறது.
முகாமின்போது, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு - இறப்பு சான்றுகள், சாதிச் சான்றுகள் மற்றும் வருவாய்த் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, கோரிக்கைகள் நிறைவேற்றப்பட உள்ளதால், பொதுமக்கள் மனுக்களை அளித்து பயனடையலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கதாநாயகனைப் போல நடிக்க முயன்றதால் தாக்கப்பட்ட அபிஷேக் பானர்ஜி: பாஜக

மதுரை கூடலழகர் கோயிலில் வைகாசி திருவிழா தேரோட்டம்!
டொனால்ட் டிரம்ப் உடல் எடையைக் குறைக்க மருத்துவ அறிவுரை!
தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்பு!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


