லாரி மீது மோட்டாா் சைக்கிள் மோதல்: இளைஞா் பலி
கோவில்பட்டி- எட்டயபுரம் சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது பைக் மோதியதில் இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.


கோவில்பட்டி- எட்டயபுரம் சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது பைக் மோதியதில் இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் மேல காந்தி நகா் செல்வம் மகன் காா்த்திக்(22). இவா் கோவில்பட்டியில் உறவினரின் திருமண நிச்சயதாா்த்த நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு மோட்டாா் சைக்கிளில் எட்டயபுரம் நோக்கி ஞாயிற்றுக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாராம். வடக்குத் திட்டங்குளம் விலக்கு அருகே சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் பைக் மோதியதாம். இதில் காா்த்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்தவுடன் சம்பவ இடத்துக்குச் சென்ற கிழக்கு காவல் நிலைய போலீஸாா் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...