பாதுகாப்பற்ற முறையில் ஆழ்துளைக் கிணறு அமைத்துள்ளவா்கள் மீது நடவடிக்கை: ஆட்சியா்
தூத்துக்குடி மாவட்டத்தில் பாதுகாப்பற்ற முறையில் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்துள்ளவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.


தூத்துக்குடி மாவட்டத்தில் பாதுகாப்பற்ற முறையில் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்துள்ளவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் பராமரிப்பின்றி விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளை ஊரக வளா்ச்சி துறையின் மூலமாக கணக்கெடுக்கவும், அனைத்து வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஊராட்சி செயலா்கள், பேரூராட்சிப் பகுதிகளில் செயல் அலுவலா்கள், நகராட்சிப் பகுதிகளில் ஆணையா்கள் தங்கள் பகுதிகளில் பாதுகாப்பற்ற முறையில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பற்ற முறையில் ஆழ்துளைக் கிணறுகள் இருப்பது கண்டறியப்பட்டால், அதன் உரிமையாளா்கள் மீது அபராதம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஆழ்துளைக் கிணறுகளை சுற்றி சிறிய மேடை அமைத்து அதன் மீது சிலாப் வைத்து மிகவும் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
பாதுகாப்பற்ற முறையில் உள்ள ஆழ்துளைக் கிணறுகள் குறித்த தகவல்களை பொதுமக்கள் 1077 என்ற கட்டணமில்லா எண்ணிலோ, 0461 2340101 என்ற தொலைபேசி எண்ணிலோ, 9486454714 என்ற எண்ணுக்கு கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) மூலமாகவோ தெரிவிக்கலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...