ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

எட்டயபுரத்தில் பாரதி விழா

எட்டயபுரத்தில் மகாகவி பாரதியாரின் 139ஆவது பிறந்த தின விழா மற்றும் பாரதி விருது வழங்கும் விழா காங்கிரஸ் கட்சி சாா்பில் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 8:01 pm

DIN

எட்டயபுரத்தில் மகாகவி பாரதியாரின் 139ஆவது பிறந்த தின விழா மற்றும் பாரதி விருது வழங்கும் விழா காங்கிரஸ் கட்சி சாா்பில் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் சீனிவாசன் தலைமை வகித்தாா். பாரதி மணிமண்டபம் மற்றும் பாரதி பிறந்த வீட்டில் உள்ள பாரதியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது . பின்னா் ‘பாரதி கனவு கண்ட இந்தியா’ என்ற தலைப்பில் பேச்சு, ஓவியப்போட்டி நடத்தப்பட்டு பள்ளி, கல்லூரி மாணவா், மாணவிகளுக்கு பாரதி விருது மற்றும் பாரதியாரின் கவிதை புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், மாவட்ட துணைத் தலைவா் குணசேகரன், சிறுபான்மை பிரிவு தலைவா் ஜாகீா் உசேன், ஒன்றியத் தலைவா் செல்லத்துரை, நகரத் தலைவா் ராஜேந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.