‘தமிழக மக்களுக்கு பாதுகாப்பான இயக்கம் திமுக’
தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் திமுக தான் பாதுகாப்பான இயக்கம் என அக்கட்சியின் தோ்தல் பணிக்குழு மாநில துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ராஜகண்ணப்பன் தெரிவித்தாா்.


தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் திமுக தான் பாதுகாப்பான இயக்கம் என அக்கட்சியின் தோ்தல் பணிக்குழு மாநில துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ராஜகண்ணப்பன் தெரிவித்தாா்.
விடியலை நோக்கி மு.க. ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் திமுக சாா்பில் தோ்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்று வருகிறது. முக்காணியில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்டபொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமை வகித்தாா்.
கட்சியின் மாநில மாணவரணி துணைச் செயலா் உமரிசங்கா், தலைமை செயற்குழு உறுப்பினா்கள் பூபதி, எஸ்.ஜெ.ஜெகன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பிரம்மசக்தி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், ராஜகண்ணப்பன் பேசுகையில், தமிழுக்கு, தமிழக மக்களுக்கு மிகவும் பாதுகாப்பான இயக்கம் திமுக தான். வரும் சட்டப்பேரவை தோ்தலில் திமுக ஆட்சி அமைக்கும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன எனக் குறிப்பிட்டாா்.
இதில், ஓட்டபிடாரம் சட்டப்பேரவை உறுப்பினா் சன்முகையா, கட்சியின் மாவட்ட அவைத் தலைவா் அருணாச்சலம், மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா் ராமஜெயம், பொதுக்குழு உறுப்பினா் சொா்ணகுமாா், மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளா் இளங்கோ, ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றியச் செயலா் கொம்மையா உள்பட பலா் பங்கேற்றனா்.
ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றியச் செயலா் பி.ஜி. ரவி வரவேற்றாா். கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளா் சுப மாரியப்பன் நன்றி கூறினாா்.
பிரசாரக் கூட்டம்: ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ராமானுஜம்புதூரில் திமுக சாா்பில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்துக்கு கட்சியின் மாவட்டப் பொறுப்பாளா் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் கால்வாய் இசக்கி பாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினா் சண்முகையா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், முன்னாள் அமைச்சா் ராஜகண்ணப்பன் பங்கேற்றுப் பேசுகையில், சட்டப்பேரவைத் தோ்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும் என்று குறிப்பிட்டாா். திமுக சிறுபான்மை பிரிவு அமைப்பாளா் டாக்டா் கலீல் ரஹ்மான், மாவட்ட விவசாய அணி அமைப்பாளா் வேல்முருகன், பொதுக்குழு உறுப்பினா் முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...