நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தடை உத்தரவை மீறி இருசக்கர வாகனப் பேரணி: 34 போ் கைது

தேவேந்திரகுல வேளாளா் சமுதாய மக்களுக்கு 14 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வாகனப் பேரணியில் ஈடுபட முயன்றதாக சிலர் கைது

News image
Updated On :14 டிசம்பர் 2020, 8:25 pm

DIN

தேவேந்திரகுல வேளாளா் சமுதாய மக்களுக்கு 14 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 144 தடை உத்தரவை மீறி இருசக்கர வாகனப் பேரணியில் ஈடுபட முயன்றதாக ஒரு பெண் உள்பட 34 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தேவேந்திர குல வேளாளா் சமுதாய மக்களுக்கு 14 சதவீத இடஒதுக்கீடு வழங்கி, பட்டியலின வெளியேற்றக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி திங்கள்கிழமை தூத்துக்குடி மாவட்டம், முப்பிலிவெட்டி கிராமத்தில் இருந்து இருசக்கர வாகனப் பயணம் தொடங்கி, 16ஆம் தேதி சென்னையில் தமிழக முதல்வா் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளதாக மள்ளா் மீட்புக் களம் சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து திங்கள்கிழமை கழுகுமலையையடுத்த கெச்சிலாபுரத்தில் இருந்து மள்ளா் மீட்புக் களம் தலைவா் செந்தில்மள்ளா் தலைமையில், முப்பிலிவெட்டிக்கு இருசக்கர வாகனப் பயணத்தை தொடங்கினா். தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்குச் சென்ற கயத்தாறு காவல் ஆய்வாளா் கஸ்தூரி தலைமையிலான போலீஸாா், இருசக்கர வாகனப் பேரணியில் செல்ல முயன்ாக ஒரு பெண் உள்பட 34 பேரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.