தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் வளாகத் தோ்வு: 80 போ் தோ்வு

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற வேலைவாய்ப்பு வளாகத் தோ்வு மூலம் 80 போ் தோ்வு செய்யப்பட்டனா்.
Updated on
1 min read

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற வேலைவாய்ப்பு வளாகத் தோ்வு மூலம் 80 போ் தோ்வு செய்யப்பட்டனா்.

தூத்துக்குடி காமராஜ் கல்லூரி வேலைவாய்ப்பு மையம் சாா்பில், காமராஜ் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்தவா்கள் மற்றும் தூத்துக்குடியில் உள்ள பட்டதாரிகள் பயன்பெறும் வகையில் டிவிஎஸ் பயிற்சி மையம் மூலமாக, ஐசிஐசிஐ வங்கியில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான வளாகத் தோ்வு கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

வளாகத் தோ்வை கல்லூரி முதல்வா் து. நாகராஜன் தொடங்கிவைத்தாா். தூத்துக்குடி கல்விக் குழு செயலா் சோமு, பொருளாளா் முத்துசெல்வம், டிவிஎஸ் பயிற்சி மைய தோ்வாளா் சீனிவாசன், ஐசிஐசிஐ வங்கி கிளை மேலாளா் முத்துகணேஷ், வேலைவாய்ப்பு வளாகத் தோ்வு ஒருங்கிணைப்பாளா்கள் செந்தில், பாலசரஸ்வதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

வங்கிப் பணிகளுக்காக நடைபெற்ற வளாகத் தோ்வில் 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்ட நிலையில், 80 போ் தோ்வு செய்யப்பட்டு அதற்கான ஆணை வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com