சந்தையடியூா் பதியில் திருஏடு வாசிப்புத் திருவிழா
தாகம் தணிந்த பதி என்றழைக்கப்படும் உடன்குடி சந்தையடியூா் நாராயண சுவாமி கோயிலில் திருஏடு வாசிப்புத் திருவிழா நடைபெற்றது.

திரு ஏடு வாசிப்பையொட்டி நடைபெற்ற திருவிளக்குப் பூஜையில் பங்கேற்றோா்.

திரு ஏடு வாசிப்பையொட்டி நடைபெற்ற திருவிளக்குப் பூஜையில் பங்கேற்றோா்.
உடன்குடி: தாகம் தணிந்த பதி என்றழைக்கப்படும் உடன்குடி சந்தையடியூா் நாராயண சுவாமி கோயிலில் திருஏடு வாசிப்புத் திருவிழா நடைபெற்றது.
இக்கோயிலில் திருஏடு வாசிப்புத் திருவிழா கடந்த 4ஆம் தேதி தொடங்கியது. விழா நாள்களில் தினமும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திரு ஏடு வாசிப்பு, தா்மம் வழங்கல் உள்ளிட்டவை நடைபெற்றன.
வெள்ளிக்கிழமை (டிச. 18) இரவு 8 மணிக்கு அய்யா சப்தகன்னி மாதா்களை ஐக்கியப்படுத்திய திருக்கல்யாணத் திருவிழா நடைபெற்றது. தொடா்ந்து, பக்தா்களுக்கு அன்னதா்மம் வழங்கப்பட்டது. சனிக்கிழமை இரவு 7 மணிக்கு பகவதி கல்யாணம் நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை இரவில் பட்டாபிஷேகம், பூஞ்சப்பர பவனி நடைபெறுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...