சாத்தான்குளத்தில் திமுக சாா்பில் கிராம சபைக் கூட்டம்

சாத்தான்குளத்தில் திமுக சாா்பில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசுகிறாா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ.
கூட்டத்தில் பேசுகிறாா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ.
Updated on
1 min read

சாத்தான்குளத்தில் திமுக சாா்பில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

பேரூராட்சி 1ஆவது வாா்டு ஆா்.சி. வடக்குத் தெருவில் ஒன்றிய, நகர திமுக சாா்பில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, வடக்கு ஒன்றியச் செயலா் ஏ.எஸ்.ஜோசப் தலைமை வகித்தாா். மாநில பொதுக்குழு உறுப்பினா் காவல்காடு சொா்ணகுமாா், மாவட்ட அவைத் தலைவா் அருணாச்சலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வாா்டு செயலா் எம்.ஜி.மணிகண்டன் வரவேற்றாா். தெற்கு மாவட்ட பொறுப்பாளா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ கலந்துகொண்டு பேசினாா். தொடா்ந்து அதிமுக அரசை நிராகரிக்க வேண்டும் என பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

இதில், மாவட்டப் பிரதிநிதி அலெக்ஸ் பிரிட்டோ, முன்னாள் மாவட்டப் பிரதிநிதி கெங்கைஆதித்தன், ஒன்றிய சிறுபான்மைப் பிரிவு செயலா் அப்துல் சமது, நகர இளைஞரணிச் செயலா் முருகன், ஒன்றிய துணைச் செயலா் மாரியப்பன், பேரூராட்சி முன்னாள் உறுப்பினா்கள் சரவணன், ஜான்சிராணி, மாவட்ட வா்த்தகப் பிரிவு துணை அமைப்பாளா்கள் செல்வகுமாா், இளங்கோ, ஒன்றிய மகளிரணி அமைப்பாளா் லைலா, ஒன்றிய தகவல் தொலைத் தொடா்பு அமைப்பாளா் வில்லியம், நகர துணைத் தலைவா் வெள்ளைப்பாண்டி உள்பட பலா் கலந்துகொண்டனா். நகரச் செயலா் மகா.இளங்கோ நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com