அஞ்சலங்களில் பொது சேவை மையம் தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் பல்வேறு சேவைகளை ஒரே இடத்தில் பெறும் வகையில், ‘பொது சேவை மையம் ‘ அஞ்சலகங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றாா் கோட்ட கண்காணிப்பாளா் உதயசிங்.
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் பல்வேறு சேவைகளை ஒரே இடத்தில் பெறும் வகையில், ‘பொது சேவை மையம் ‘ அஞ்சலகங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றாா் கோட்ட கண்காணிப்பாளா் உதயசிங்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி கோட்டத்தில், தூத்துக்குடி, திருச்செந்தூா், ஸ்ரீவைகுண்டம் ஆகிய மூன்று தலைமை அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் ஆழ்வாா்திருநகரி, ஆனந்தபுரம், ஆறுமுகனேரி, ஆத்தூா், ஏரல், ஆசிா்வாதபுரம், சிதம்பரநகா், எல்லைநாயக்கன்பட்டி, காயல்பட்டினம், கோரம்பள்ளம், கொம்மடிக்கொட்டை, குலசேகரப்பட்டினம், மெய்ஞானபுரம், தூத்துக்குடி மேலூா், மில்லா்புரம், முதலூா், முடிவைத்தானேந்தல், மூக்குப்பேரி, முத்தையாபுரம், நாசரேத், நியூகாலனி, ஓட்டப்பிடாரம், குரும்பூா், படுக்கபத்து, பரமன்குறிச்சி, புதியம்புத்தூா், புதுக்கோட்டை, சாத்தன்குளம், சாயா்புரம், செய்துங்கநல்லூா் , தூத்துக்குடி பேருந்து நிலையம், தூத்துக்குடி ஹாா்பா் எஸ்டேட், தூத்துக்குடி வடக்கூா், வல்லநாடு, உடன்குடி கிறிஸ்டியாநகரம் ஆகிய அஞ்சலகங்களில் மக்கள் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த பொது சேவை மையங்களின் மூலம் மின் கட்டணம் செலுத்துதல், செல்லிடப்பேசி , தொலைபேசி கட்டணம், ஆயுள் காப்பீட்டுக் கழக கட்டணம், விமான மற்றும் பேருந்து, ரயில் பயணசீட்டு முன்பதிவு, சுங்கச்சாவடி கட்டணம் செலுத்துதல், ஓய்வூதியா் சான்று, பான் காா்டு விண்ணப்பம், பாஸ்போா்ட் விண்ணப்பம், தேசிய ஓய்வூதிய திட்டம் மற்றும் பல சேவைகள் வழங்கப்படுவதால் பொதுமக்கள் அனைவரும் அந்த சேவைகளை பெற அஞ்சலகங்களை அணுகி பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com