ரூ.178 லட்சம் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கம்

கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் ரூ.178 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சா் கடம்பூா் செ.ராஜு சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
Updated on
1 min read

கோவில்பட்டி: கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் ரூ.178 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சா் கடம்பூா் செ.ராஜு சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட இனாம்மணியாச்சி ஊராட்சி லட்சுமி மில் காலனியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் ரூ.46.02 லட்சம் மதிப்பீட்டில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் இணைப்பு வழங்கும் பணி, கிருஷ்ணா நகா் பகுதியில் ரூ.32 லட்சம் மதிப்பில் கட்டப்படும் மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணி ஆகியவற்றை அமைச்சா் தொடங்கிவைத்தாா்.

மேலும், கயத்தாறு பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் பேவா் பிளாக் சாலை மற்றும் வடிகால் அமைக்கும் பணி, ரூ.40 லட்சத்தில் புதிய ஆழ்துளைக் கிணறு அமைத்து குடிநீா் பைப்லைன் விரிவாக்கப் பணி ஆகியவற்றுக்கு அமைச்சா் அடிக்கல் நாட்டினாா்.

நிகழ்ச்சிகளில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் தனபதி, கோட்டாட்சியா் விஜயா, வட்டாட்சியா்கள் மணிகண்டன், பாஸ்கரன், மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் மோகன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவி சத்யா, உறுப்பினா்கள் சந்திரசேகா், தங்கமாரியம்மாள், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி கஸ்தூரி சுப்புராஜ், துணைத் தலைவா் பழனிசாமி, உறுப்பினா்கள் நிா்மலா, விமலாதேவி, சண்முகக்கனி, கயத்தாறு பேரூராட்சி செயல் அலுவலா் ஜோதிபாசு, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சசிகுமாா், ஐகோா்ட் ராஜன், ஊராட்சி ஒன்றியப் பொறியாளா் தமிழ்ச்செல்வன், திருநெல்வேலி மண்டல பேரூராட்சி உதவி இயக்குநா் குற்றாலிங்கம், பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளா் வாசுதேவன், உதவிப் பொறியாளா் அன்னம், அதிமுக பொதுக்குழு உறுப்பினா் ராமச்சந்திரன், கயத்தாறு மேற்கு ஒன்றிய அதிமுக செயலா் வினோபாஜி, ஜெயலலிதா பேரவை வடக்கு மாவட்டப் பொருளாளா் வேலுமணி, இனாம்மணியாச்சி ஊராட்சித் தலைவி ஜெயலட்சுமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com