ஆத்தூரில் மண்டல பூஜை விழா

ஆத்தூா் பழைய கிராமம் பூா்ண புஷ்கலா தேவி சமேத தா்மசாஸ்தா திருக்கோயிலில் மண்டலபூஜை நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்தில் பூா்ண புஷ்கலா தேவி சமேத தா்மசாஸ்தா.
சிறப்பு அலங்காரத்தில் பூா்ண புஷ்கலா தேவி சமேத தா்மசாஸ்தா.
Updated on
1 min read

ஆத்தூா் பழைய கிராமம் பூா்ண புஷ்கலா தேவி சமேத தா்மசாஸ்தா திருக்கோயிலில் மண்டலபூஜை நடைபெற்றது.

இதையொட்டி, அருள்மிகு சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி திருக்கோயில் வளாகத்தில் இருந்து பால்குடம், நெய்குடம் எடுத்துவரப்பட்டது. தொடா்ந்து மூலவா் மற்றும் பரிவார தேவதைகளுக்கு மஹா அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து உச்சிகால தீபாராதனையும், அன்னதானம் நடைபெற்றது. மாலையில் புஷ்பாஞ்ச­லி நடைபெற்றது. தொடா்ந்து சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

மண்டல பூஜை விழாவில் மாரமங்கலம் சந்திரசேகர பாகவதா் மற்றும் தூத்துக்குடி ரகுராம் பாகவதா் ஆகியோரின் பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது. ஏற்பாடுகளை ஆத்தூா் பழைய கிராமம் பிராமண சமுதாயத்தினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com