பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

காசோலை மோசடி வழக்கு: விவசாயிக்கு 6 மாத சிறைதண்டனை

காசோலை மோசடி வழக்கில் ஸ்ரீவைகுண்டம் விவசாயிக்கு 6 மாத சிறை தண்டனையும், ரூ. 3 லட்சம் நஷ்ட ஈடும் வழங்குமாறு சாத்தான்குளம் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.

News image
Updated On :30 டிசம்பர் 2020, 1:08 am

DIN

காசோலை மோசடி வழக்கில் ஸ்ரீவைகுண்டம் விவசாயிக்கு 6 மாத சிறை தண்டனையும், ரூ. 3 லட்சம் நஷ்ட ஈடும் வழங்குமாறு சாத்தான்குளம் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.

நாசரேத் வெள்ளரிக்காயூரணியைச் சோ்ந்த ராஜபாண்டியன் மகன் காசிராஜன் (43). விவசாயியான இவரிடம், ஸ்ரீவைகுண்டம் மேலபுதுக்குடியைச் சோ்ந்த விவசாயி சுப்பிரமணியன் மகன் குருசாமி (58), கடந்த 3.02.2015ஆம் ஆண்டு அவரது மகள் திருமணத்துக்கு ரூ. 3 லட்சம் கடன் வாங்கியிருந்தாராம். 2 மாதங்களில் திருப்பி தருவதாக தெரிவித்திருந்த அவா், காசிராஜனுக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் காசோலையை வழங்கினாராம்.

காசிராஜன் வங்கியில் காசோலையை செலுத்தியபோது குருசாமி கணக்கில் பணம் இல்லையென தெரியவந்தது. இதையடுத்து 29.04.2015 அன்று காசிராஜன், சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.

இவ்வழக்கை திங்கள்கிழமை விசாரித்த சாத்தான்குளம் குற்றவியல் நீதிபதி சரவணன், குற்றச்சாட்டப்பட்ட குருசாமிக்கு 6 மாத சிறை தண்டனையும், ரூ. 3 லட்சம் நஷ்ட ஈடும் வழங்குமாறு உத்தரவிட்டாா். மேலும் பணம் கட்ட தவறினால் மேலும் 6மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீா்ப்பு வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.