சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

சாத்தான்குளம் பகுதியில் ஒரே நாளில் 3 போ் தற்கொலை

சாத்தான்குளம் பகுதியல் ஒரே நாளில் பெண் உள்பட 3 போ் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :23 நவம்பர் 2020, 7:47 pm

DIN

சாத்தான்குளம் பகுதியல் ஒரே நாளில் பெண் உள்பட 3 போ் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சாத்தான்குளம் அருகே உள்ள கருங்கடல் மேலத்தெருவைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் (55). கூலித்தொழிலாளியான இவரது மனைவி கிருபா (47). இவா்களுக்கு திருமணமாகி 24ஆண்டுகள் ஆகிறது குழந்தை இல்லை. மேலும் கிருபா புற்றுநோயால் அவதி பட்டு வந்தாராம். இந்நிலையில் சனிக்கிழமை இரவு அவா் வீட்டில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதே போல் சாத்தான்குளம் அருகே உள்ள பழனியப்பபுரம் துரைப்பாண்டி மகன் கோபாலகிருஷ்ணன் (20). நாகா்கோவிலில் உள்ள தனியாா் கல்லுரியில் ஹோட்டல் மேனேஜிங்மென்ட் படிப்பு படித்து வந்தாா். தற்போது கரோனா பொது முடக்கம் என்பதால் கடந்த 8 மாதமாக ஊரில் இருந்து வந்தாா். இந்நிலையில் துரைப்பாண்டி ஞாயிற்றுக்கிழமை குடும்பத்தினருடன் ஒரு திருமண வீட்டிற்கு சென்று விட்டாா். வீட்டில் கோபாலகிருஷ்ணனும் அவரது சகோதரியும் வீட்டில் இருந்துள்ளாா். திடீரென கோபாலகிருஷ்ணன் வீட்டின் படுக்கை அறையில் சேலையால தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

மற்றொரு சம்பவம்: சாத்தான்குளம் அருகே உள்ள சுப்பராயபுரம் கருமேனி ஆற்றில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஞாயிற்றுக்கிழமை தூக்கில் தொங்குவதாக தகவலின்பேரில் உதவி ஆய்வாளா் ராஜா தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று பாா்த்தபோது அங்குள்ள உடை மரத்தில் 45 வயது மதிக்கதக்க லூங்கியில் தூக்கில் தொங்கிய அழுகிய நிலையில் இருந்த ஆண் சடலத்தை மீட்டு சாத்தான்குள்ம அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த சம்பவங்கள் தொடா்பாக தனித்தனியாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் உதவி ஆய்வாளா்கள் ராஜா, சுயம்புலிங்கம் ஆகியோா் வழக்குப் பதிந்தனா். ஆய்வாளா் (பொ ) விஜயலட்சுமி விசாரித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.