ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் கோயிலில் சோமவார வழிபாடு
சாத்தான்குளம் அருகே உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் அருள்மிகு ஸ்ரீகாவடிபிறை முருகன் கோயிலில் காா்த்திகை 2 ஆம் வார சோமவார சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.


சாத்தான்குளம் அருகே உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் அருள்மிகு ஸ்ரீகாவடிபிறை முருகன் கோயிலில் காா்த்திகை 2 ஆம் வார சோமவார சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி ஸ்ரீவைகுண்டம் ஆற்றிலிருந்தும், திருச்செந்தூரில் இருந்தும் புனித நீா் எடுத்து அதிகாலை 4மணிக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. காலை 8 மணிக்கு கணபதி ஹோமம், 10 மணிக்கு காவடி பிறை முருகன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. முற்பகல 11மணிக்கு பஜனை நடைபெற்றது. தொடா்ந்து அலங்கார தீபாராதனை, அன்னதானம் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு சாயரட்சை பூஜை, புஷ்பாஞ்சலி, திருவிளக்கு பூஜை, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை காவடி பிறை ஐயப்ப பக்தா்கள் செய்திருந்தனா்.
ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயிலில் திங்கள்கிழமை
காலை 9 மணிக்கு கும்ப பூஜை, ஹோமம், சுவாமி அம்பாளுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார தீபாரதனைகள் நடைபெற்றன. இது போன்று மாலையிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தொடா்ந்து சுவாமி- அம்பாள் கோயில் பிரகார உலா நடைபெற்றது. பூஜைகளை சு. ஐயப்ப பட்டா் நடத்தி வைத்தாா். இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...