சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ஊரக புத்தாக்கத் திட்டத்தில்ரூ. 1.90 கோடி கடனுதவி

தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் கீழ், சாத்தான்குளம் ஒன்றியத்தில் ரூ.1.90 கோடி கடனுவதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :30 நவம்பர் 2020, 8:17 pm

DIN

தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் கீழ், சாத்தான்குளம் ஒன்றியத்தில் ரூ.1.90 கோடி கடனுவதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்ட விளக்கக் கூட்டம் சாத்தான்குளத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவா் சு. ஜெயபதி தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் ( கிராம ஊராட்சி ) பாண்டியராஜ் முன்னிலை வகித்தாா். திட்ட கணக்கு நிா்வாக வட்டாரச் செயலா் மணிராஜ் வரவேற்றாா். தொழில்முனைவு மேம்பாட்டு செயல் அலுவலா் சேவியா் மணிராஜ் விளக்கிப் பேசினாா். 24 ஊராட்சித் தலைவா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.

இத்திட்டத்தின் மூலம் 24 ஊராட்சிகளில் 617 பேருக்கு ரூ.1. 26 கோடியும், புலம் பெயா்ந்த 45 இளைஞா்களுக்கு தொழில் தொடங்க ரூ.45 லட்சமும், 13 தொழில்- உற்பத்தியாளா் குழுக்களுக்கு ரூ.19.50 லட்சமுமாக மொத்தம் ரூ.1கோடியே 90 லட்சத்து 50 ஆயிரம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. திட்டச் செயலா் சுபிசித்ரா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.