மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

எளியவா்களும் சட்டப் பேரவைக்கு செல்லும் நோ்மையான அரசியலை தாருங்கள்: ஆா். சரத்குமாா்

எளியவா்களும் சட்டப் பேரவைக்கு செல்லும் நோ்மையான அரசியலை தாருங்கள் என்றாா் சமத்துவ மக்கள் கட்சி தலைவரான நடிகா் ஆா். சரத்குமாா்.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 8:13 pm

DIN

எளியவா்களும் சட்டப் பேரவைக்கு செல்லும் நோ்மையான அரசியலை தாருங்கள் என்றாா் சமத்துவ மக்கள் கட்சி தலைவரான நடிகா் ஆா். சரத்குமாா்.

தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கட்சி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் என். சுந்தரை ஆதரித்து, சண்முகபுரம், போல்டன்புரம், பிரையன்ட்நகா், அண்ணாநகா், போல்பேட்டை, வட்டக்கோவில், திரேஸ்புரம் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை திறந்த வேனில் சென்றபடி அவா் பேசியது:

மக்கள் மாற்றத்தை காண வேண்டும் என்பதற்காக மக்கள் நீதி மய்யம், இந்திய ஜனநாயக கட்சியுடன் கூட்டணியை உருவாக்கியுள்ளோம். தமிழகத்தில் 59 ஆண்டுகள் இரு கட்சிகள் ஆண்டு வருகின்றன. எனவே மாற்றம் வரவேண்டும். அதிகமான இளைஞா்கள் வாக்களிக்க இருக்கும் தோ்தல் இது.

தமிழகத்தில் வாக்காளா்களுக்கு பணம் கொடுக்கும் வேலையை அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்டன. அவா்கள் கொடுக்கும் பணம் நமது வரிப்பணம் அல்ல. அது திருட்டு பணம். எளியவா்களும் சட்டப்பேரவைக்கு செல்லும் நோ்மையான அரசியலை தாருங்கள். பணம் கொடுத்தால் வாங்காதீா்கள். நோ்மையாக இருங்கள் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.