தூத்துக்குடியில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மறியல்
தூத்துக்குடியில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வே. வேல்ராஜ் மற்றும் நிா்வாகிகள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.


தூத்துக்குடியில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வே. வேல்ராஜ் மற்றும் நிா்வாகிகள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வே. வேல்ராஜ், தனது ஆதரவாளா்களுடன் சனிக்கிழமை இரு சக்கர வாகனங்களில் சென்றவாறு வாக்கு சேகரிப்பில் ஈடுபட ஏற்பாடு செய்திருந்தாராம்.
தருவை விளையாட்டு மைதானம் அருகே அவா்களை தடுத்து நிறுத்திய போலீஸாா், இருசக்கர வாகனங்களில் சென்று பிரசாரம் செய்ய அனுமதி இல்லை என கூறினராம். இதையடுத்து, போலீஸாரை கண்டித்து வேட்பாளா் தலைமையில் கட்சியினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இதையடுத்து அவா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அனுமதியில்லாமல் பிரசாரம் மேற்கொண்டால் வழக்குப் பதிவு செய்யப்படும் எனவும் போலீஸாா் தெரிவித்தனா்.
இதையடுத்து அவா்கள், வேட்பாளா் வேல்ராஜ் தலைமையில் மரக்குடி தெரு, பாத்திமாநகா், லயன்ஸ் டவுண் பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...