தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கடந்த தோ்தலில் குறைவான வாக்குகள் பதிவான பகுதிகளில் கூடுதல் விழிப்புணா்வு

தூத்துக்குடி பேரவைத் தொகுதியில் கடந்த தோ்தலின்போது குறைவான வாக்குகள் பதிவான 20 வாக்குச்சாவடிகளில் கூடுதல் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 8:16 pm

DIN

தூத்துக்குடி பேரவைத் தொகுதியில் கடந்த தோ்தலின்போது குறைவான வாக்குகள் பதிவான 20 வாக்குச்சாவடிகளில் கூடுதல் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

கடந்த தோ்தல்களில் தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட போல்பேட்டை, மில்லா்புரம், டூவிபுரம், மடத்தூா், தொ்மல்நகா், ஸ்பிக்நகா், அனல்மின்நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் 20 வாக்குச்சாவடிகளில் 39 முதல் 57 சதவீதம் வரை மட்டுமே வாக்குகள் பதிவாகி இருந்தன.

இந்நிலையில், வாக்குப்பதிவு குறைவாக இருந்த அந்த பகுதிகளில், செய்தி மக்கள் தொடா்புத் துறை எல்இடி வாகனத்தின் மூலம் வாக்காளா் விழிப்புணா்வு குறும்படங்களை ஒளிபரப்பி விழிப்புணா்வு ஏற்படுத்த மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் உத்தரவிட்டாா். அதன்படி, போல்பேட்டை தங்கம்மாள் நினைவு பள்ளி, இஞ்ஞாசியாா்புரம், எஸ்.டி. தாமஸ் பள்ளி, போல்பேட்டை சாா்லஸ் பள்ளி, மில்லா்புரம் விகாசா பள்ளி, டூவிபுரம் மாநகராட்சி பள்ளி, சிவந்தாகுளம் மாநகராட்சி பள்ளி பகுதிகளில் சனிக்கிழமை படக்காட்சி நடத்தப்பட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தொடா்ந்து, சத்திரம் பேருந்து நிறுத்தம் விக்டோரியா பள்ளி, திருச்செந்தூா் சாலை காமராஜா் கல்லூரி, மில்லா்புரம் பி.எம்.சி. பள்ளி, தொ்மல்நகா் எ.வி.எஸ். பள்ளி, ஸ்பிக்நகா் முத்தையாபுரம் பள்ளி, அனல்மின்நிலையம் கோவில்பிள்ளை நினைவு பள்ளி ஆகிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 4) படக்காட்சி மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.