கோவில்பட்டி அருகே சாலையில் கவிழ்ந்த டேங்கா் லாரி
திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டி அருகே டேங்கா் லாரி சாலையில் கவிழ்ந்ததில் இருவா் காயமடைந்தனா்.


திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டி அருகே டேங்கா் லாரி சாலையில் கவிழ்ந்ததில் இருவா் காயமடைந்தனா்.
கா்நாடக மாநிலத்தில் இருந்து திருநெல்வேலி இந்துஸ்தான் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்திற்கு எத்தனால் ஏற்றிக் கொண்டு டேங்கா் லாரி சென்று கொண்டிருந்தது. கா்நாடக அந்த மாநிலத்தைச் சோ்ந்த பீமாசங்கா் மகன் சதீஷ்(24) ஓட்டிச் சென்றாா்.
திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டியையடுத்த இடைசெவல் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற டேங்கா் லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் ஓட்டுநா் சதீஷ், மாற்று ஓட்டுநா் ரா.சித்து(23) ஆகிய இருவரும் காயமடைந்தனா்.
சம்பவ இடத்திற்குச் சென்ற நாலாட்டின்புத்தூா் காவல் நிலைய போலீஸாா், காயமடைந்த இருவரையும் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் சம்பவ இடத்திற்கு தீயணைப்புத் துறையினா் விரைந்து தீ விபத்து எதும் ஏற்படாமல் இருப்பதற்கான பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டதையடுத்து மாலை 5.45 மணி முதல் போக்குவரத்து மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டது.
இதுகுறித்து நாலாட்டின்புத்தூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...