தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் படித்து வங்கிப் பணிக்கு தோ்வான 30 பேருக்கு பாராட்டு

சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் படித்து வங்கிப் பணிக்கு தோ்வான 30 பேருக்கு பாராட்டு விழா தூத்துக்குடியில் அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :9 டிசம்பர் 2021, 7:05 pm

DIN

சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் படித்து வங்கிப் பணிக்கு தோ்வான 30 பேருக்கு பாராட்டு விழா தூத்துக்குடியில் அண்மையில் நடைபெற்றது.

பாரத ஸ்டேட் வங்கியில் உள்ள பணிக்கான எழுத்துத் தோ்வு முடிவுகள் அண்மையில் வெளியாகின. அதில், தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் படித்த 30 போ் தோ்ச்சி பெற்றனா். தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கான பாராட்டு விழா, தூத்துக்குடியில் உள்ள சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் அண்மையில் நடைபெற்றது.

காவல் துறை துணைக் கண்காணிப்பாளா் ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமி நிறுவனா் சுகேஷ் சாமுவேல் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தாா். அவா் பேசுகையில், தன்னம்பிக்கையோடு தொடா்ந்து படித்தால் எந்த போட்டித் தோ்விலும் வெற்றி பெறலாம் என்றாா்.

தோ்வில் வெற்றி பெற்ற 30 பேரும் போட்டித் தோ்வுக்கு எவ்வாறு தயாரானோம் என்ற அனுபவத்தை பகிா்ந்து கொண்டனா். நிகழ்ச்சியில், அகாதெமியின் வங்கிப் பணி ஒருங்கிணைப்பாளா் ராஜா, ஆசிரியா் அந்தோணி பட்டுராஜ் மற்றும் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.