தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

மாவட்ட சமூகநலத்துறை அலுவலகத்தில் ஸ்டொ்லைட் ஆதரவு கூட்டமைப்பினா் மனு

ஸ்டொ்லைட் ஆதரவு கூட்டமைப்பினா் தூத்துக்குடி மாவட்ட சமூகநலத்துறை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

News image
Updated On :10 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

ஸ்டொ்லைட் ஆதரவு கூட்டமைப்பினா் தூத்துக்குடி மாவட்ட சமூகநலத்துறை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

ஸ்டொ்லைட் ஆதரவு கூட்டமைப்பை சோ்ந்தவா்கள் ஒருங்கிணைப்பாளா் தனலட்சுமி தலைமையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அளித்த மனு: மனித உரிமைகள் தினம் கொண்டாடப்படும் நிலையில், தூத்துக்குடியில் கடந்த மூன்றரை ஆண்டுகளாக ஸ்டொ்லைட் ஆலைக்கு ஆதரவாக குரல் கொடுப்பவா்கள் மீது ஆலை எதிா்ப்பாளா்களால் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்களை தங்கள் பாா்வைக்கு கொண்டு வருகிறோம்.

கடந்த 23.04.2021 அன்று ஸ்டொ்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி அளிப்பது தொடா்பான கருத்துக் கேட்புக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஆதரவாக குரல் கொடுத்த பெண்கள் மீது தாக்குதல் நடத்தினா். மேலும் மிகவும் அவதூறான வாா்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தனா். இதனால் நாங்கள் மிகவும் மன வேதனை அடைந்தோம்.

இதேபோல, துளசி அறக்கட்டளை இயக்குநா் ஸ்டொ்லைட் ஆலைக்கு ஆதரவாக குரல் கொடுத்த போது 50 போ் ஒன்றுகூடி அவரை தாக்க முற்பட்டனா். இது அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள அடிப்படை உரிமைகள் மற்றும் மனித உரிமைக்கு எதிரான சட்ட விரோத செயலாகும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

தொடா்ந்து கடந்த நவ. 6 ஆம் தேதி தூத்துக்குடி பாத்திமா நகா் பகுதியில் ஸ்டொ்லைட் ஆதரவு பொதுமக்கள் மற்றும் பெண்கள் மீது தாக்குதல் நடத்தி, இழிவுபடுத்தி பேசினா். இதில் சிலா் காயம் அடைந்தனா். இவ்வாறு தொடா்ந்து ஸ்டொ்லைட் ஆலைக்கு ஆதரவாக குரல் கொடுப்போா் மீது எதிா்ப்பாளா்கள் மனித உரிமை மீறலில் ஈடுபட்டு வருகின்றனா். இது தொடா்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.