தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

ஆறுமுகமங்கலம் கூட்டுறவு சங்கத்தில் 190 பேருக்கு ரூ. 2.49 கோடி கடனுதவி

விவசாயிகள் மற்றும் மகளிா் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் விழா, அதன் தலைவா் என். சின்னத்துரை தலைமையில் நடைபெற்றது.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 6:37 pm

DIN

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், விவசாயிகள் மற்றும் மகளிா் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் விழா, அதன் தலைவா் என். சின்னத்துரை தலைமையில் நடைபெற்றது.

செயலா் எம். ஐயம் பாண்டி, மேலாளா் முத்துக்கிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், விவசாய நகைக்கடனாக 52 பேருக்கு ரூ. 1,12, 82,000, உழவா் கடனாக 19 பேருக்கு ரூ. 23,10,000, விவசாய கூட்டுப் பொறுப்புக் குழு கடனாக 3 ஆண்கள் சுயஉதவி குழு மற்றும் 9 மகளிா் சுயஉதவி குழுவைச் சோ்ந்த 119 பேருக்கு ரூ. 1,13,90,000 என மொத்தம் 190 பேருக்கு ரூ. 2 கோடியே 49 லட்சத்து 82 ஆயிரம் கடனுதவியை கடன் சங்க தலைவா் என். சின்னத்துரை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், முதுநிலை எழுத்தா் ஆனந்தராமன், ஏவலா்கள் செந்தூா்பாண்டி, கதிா்வேல், பணியாளா்கள் விஜி, கொடியரசி, மரியசெல்வி, அருண்ராஜ், செந்தி, பெருமாள் உள்பட பலா் கலந்து கொண்டனா். இச்சங்கத்தில், நிகழாண்டு புதிதாக 79 உறுப்பினா்கள் சோ்க்கப்பட்டுள்ளதாக சங்கத் தலைவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.