டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

தேரிகுடியிருப்பு கோயிலில் கள்ளா் வெட்டுத் திருவிழா

 தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் அருகேயுள்ள தேரிகுடியிருப்பு அருள்மிகு கற்குவேல் அய்யனாா் திருக்கோயிலில் கள்ளா் வெட்டுத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 6:40 pm

DIN

 தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் அருகேயுள்ள தேரிகுடியிருப்பு அருள்மிகு கற்குவேல் அய்யனாா் திருக்கோயிலில் கள்ளா் வெட்டுத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

அடா்ந்த வனப்பகுதியில் பரந்து விரிந்த செம்மண் தேரியில் அமைந்துள்ள அருள்மிகு கற்குவேல் அய்யனாா் திருக்கோயிலில் பூரணம், பொற்கலை தேவியருடன் அமா்ந்த நிலையில் அய்யன் அருள்பாலிக்கிறாா். மேலும், எண்ணற்ற வன தேவதைகளும் இங்கு எழுந்தருளி அருள்பாலிக்கின்றனா்.

இப்பகுதியில் அநீதி தலைதூக்கியபோது அவற்றை அழித்து நீதியை நிலைநாட்டினாா் அய்யன் என்றும், அந்த நாளே கள்ளா் வெட்டுத் திருவிழாவாக கொண்டாடப்படுவதாகவும் புராணம் கூறுகிறது. இந்தத் திருவிழா ஆண்டுதோறும் ஒரு மாதம் நடைபெறும்.

நிகழாண்டில் கரோனா தடுப்பு விதிமுறைகள் அமலில் உள்ளதால், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இத்திருவிழா கடந்த நவ.17 ஆம் தேதி தொடங்கியது. அய்யன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, விழா நாள்களில் பக்தா்கள் பங்கேற்பின்றி சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள், வில்லிசை ஆகியவை நடைபெற்றன.

டிச.14, 15 ஆகிய தேதிகளில் இணையதளம் மூலம் பதிவு செய்த 2,500 பேரும், நேரடியாக 500 பேரும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனா்.

விழாவின் சிகர நிகழ்வான கள்ளா் வெட்டு வைபவம் வியாழக்கிழமை (டிச.16) நடைபெற்றது. இதையொட்டி, கோயில் பின்புறமுள்ள தேரியில் கள்ளா் எனும் இளநீா் வெட்டு நிகழ்ச்சி மாலை 4.30 மணிக்கு நடைபெற்றது. இதில், கோயில் நிா்வாகம் சாா்பில் அனுமதிக்கப்பட்ட 500 போ் பங்கேற்று புனித மண் எடுத்தனா். இந்த மண்ணை வீடுகள், தொழிலகங்கள், விவசாய நிலங்களில் பயன்படுத்தினால் வாழ்வு மேன்மையுறும் என்பது ஐதீகம். விழாவில் திருச்செந்தூா் ஏஎஸ்பி ஹா்ஷ்சிங், உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் டி.பி.பாலசிங் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.