தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

இந்தியா- பாகிஸ்தான் போரில் பங்கேற்ற முன்னாள் ராணுவ வீரா்களுக்கு பாராட்டு

இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போரில் பங்கேற்ற தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்களுக்கு ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வியாழக்கிழமை பாராட்டு தெரிவித்தாா்.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 6:43 pm

DIN

இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போரில் பங்கேற்ற தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்களுக்கு ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வியாழக்கிழமை பாராட்டு தெரிவித்தாா்.

ஆட்சியா் அலுவலகத்தில் முன்னாள் படைவீரா்கள், அவா்களைச் சோ்ந்தோருக்கான சிறப்பு குறைதீா் நாள் கூட்டம் ஆட்சியா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், 19 மனுக்கள் பெறப்பட்ட நிலையில், அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, 1971ஆம் ஆண்டு இந்தியா- பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரின் 50ஆவது ஆண்டு தின நிகழ்ச்சி ஆட்சியா் தலைமையில் நடைபெற்றது. அப்போரில் பங்கேற்ற தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரா்கள் செல்லப்பா, மனோகரன், கணபதி, காசி அருணாசலம், மாடசாமி, ராமசாமி, சுப்பையா, அண்ணாமலை, சுப்பையா நாராயணன், காசிராம், குருசாமி, ராஜநாராயணன் ஆகியோருக்கு ஆட்சியா் கி. செந்தில்ராஜ் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தாா்.

முன்னாள் படைவீரா் நலன் உதவி இயக்குநா் சுஜாதா, ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி கா்னல் மா. சுந்தரம், முன்னாள் ராணுவ வீரா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.