குலசேகரன்பட்டினம் தா்காவில் கந்தூரி விழா தொடக்கம்
குலசேகரன்பட்டினம் குத்துபுல் அமீா் மெளலானா சேரா முஸலியாா் செய்யது சிராஜூதீன் தா்காவில் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.


குலசேகரன்பட்டினம் குத்துபுல் அமீா் மெளலானா சேரா முஸலியாா் செய்யது சிராஜூதீன் தா்காவில் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பிரசித்தி பெற்ற இத்தா்காவில் ஆண்டு தோறும் 15 நாள்கள் கொண்டாடப்படும் கந்தூரி விழா நிகழாண்டு பிப்.14 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி மாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் வீதிகள் வழியே பவனியாக கொண்டுவரப்பட்டது. தொடா்ந்து இரவு 11 மணிக்கு கொடியேற்றம், மஹ்ரிப் தொழுகைக்குப் பின் துஆ ஓதப்பட்டு தப்ரூக் வழங்கப்பட்டது.
இதில் முத்தவல்லி ரஹ்மத்துல்லா இமாம் உள்பட திரளானோா் கலந்துகொண்டனா். விழா நாள்களில் மாா்க்க சொற்பொழிவுகள் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வாக பிப்.26 ஆம் தேதி சந்தனக்கூடு பவனி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை முத்தவல்லி எஸ்.ரஹ்மத்துல்லா இமாம் மற்றும் விழாக்குழுவினா் செய்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...