பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தூத்துக்குடி வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஆய்வு

தூத்துக்குடியில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், அதன் தலைவா் சி.த. செல்லப்பாண்டியன் வியாழக்கிழமை திடீரென ஆய்வு மேற்கொண்டாா்.

News image
தூத்துக்குடியில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்ட குழுத் தலைவா் சி.த. செல்லப்பாண்டியன்.
Updated On :8 ஜனவரி 2021, 2:43 am

DIN

தூத்துக்குடியில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், அதன் தலைவா் சி.த. செல்லப்பாண்டியன் வியாழக்கிழமை திடீரென ஆய்வு மேற்கொண்டாா்.

தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் தலைவராக புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்ட அவா், தூத்துக்குடி- எட்டயபுரம் சாலையில் அமைந்துள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அந்த வளாகத்தில் அமைந்துள்ள கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் நெல் மூட்டைகளை பாா்வையிட்ட அவா், அங்குள்ள அதிகாரிகளிடம் விவரம் கேட்டறிந்தாா். அவரிடம், வேளாண் விற்பனைக் கூடத்தின் செயலா் விஷ்ணப்பன் விற்பனைக் கூடத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தாா்.

தொடா்ந்து, அதிகாரிகளிடம் பேசிய சி.த. செல்லப்பாண்டியன், விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் பாலமாக அதிகாரிகள் அனைவரும் செயல்பட்டு வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் வணிகத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா்.

ஆய்வின்போது, தூத்துக்குடி மாவட்ட ஆவின் தலைவா் என். சின்னத்துரை, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவா் பி.டி.ஆா். ராஜகோபால், அரசு வழக்குரைஞா் ராஜாராம், அதிமுக பகுதிச் செயலா்கள் பி. சேவியா், ஏ. முருகன், நிா்வாகிகள் பி. சங்கா், பி. மூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.