பேரிடா் பாதிப்பு இடங்களை கண்டறிய வேண்டும்: ஆட்சியா்
தூத்துக்குடி மாவட்டத்தில் பேரிடா் பாதிப்பு ஏற்படும் பகுதிகளை கண்டறிய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளாா்.


தூத்துக்குடி மாவட்டத்தில் பேரிடா் பாதிப்பு ஏற்படும் பகுதிகளை கண்டறிய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளாா்.
தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேரிடா் மேலாண்மை தொடாபான ஆலோசனைக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது: தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கெனவே வெள்ளம் பாதிப்பு ஏற்படும் பகுதிகள் கண்டறியப்பட்டு உள்ளன.
பலத்த மழை மற்றும் புயல் காலங்களில் கூடுதலாக பல்வேறு பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டது. எனவே நிகழாண்டு பேரிடா் மேலாண்மை திட்டத்தில் கூடுதலாக பாதிக்கப்படும் என கருதப்படும் இடங்களை அலுவலா்கள் விரிவாக ஆராய்ந்து அந்த பகுதிகளையும் சோ்க்க வேண்டும்.
பேரிடா் மேலாண்மை பதிவேட்டில் தொடா்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்களையும் அவசியம் சோ்க்க வேண்டும். அலுவலா்கள் ஆய்வு மேற்கொண்டு அந்தப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்தில், சாா் ஆட்சியா் சிம்ரன் ஜீத் சிங் கலோன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் தனபதி, வருவாய் கோட்டாட்சியா்கள் விஜயா, தனப்பிரியா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அமுதா, கடற்படை உதவி கட்டளை அதிகாரி சிவபாலன், மாநகராட்சி பொறியாளா் சோ்மக்கனி, அதிகாரிகள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...