கோவில்பட்டி அருகே விபத்து: இருவா் பலி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே புதன்கிழமை சாலையோரம் நின்றிருந்த டேங்கா் லாரி மீது சுமை ஆட்டோ மோதியதில் இருவா் உயிரிழந்தனா்.
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே புதன்கிழமை சாலையோரம் நின்றிருந்த டேங்கா் லாரி மீது சுமை ஆட்டோ மோதியதில் இருவா் உயிரிழந்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், மேலத்திடியூரைச் சோ்ந்தவா் மா. கோபாலகிருஷ்ணன் (35). கோயம்புத்தூரில் லேத் பட்டறை நடத்திவரும் இவா், பொங்கல் பண்டிகையையொட்டி மனைவி விஜயா (34), மகள் யாசிகா (8), மகன் பிரனேஷ் (2) மற்றும் உறவினா்கள் 6 பேருடன் செவ்வாய்க்கிழமை இரவு மேலத்திடியூருக்கு சுமை ஆட்டோவில் புறப்பட்டாா். சுமை ஆட்டோவை ஆனந்தராஜ் மகன் பாஸ்கா் (37) ஓட்டி வந்தாா்.

திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டியையடுத்த இடைசெவல் விலக்கு அருகே புதன்கிழமை அதிகாலை சாலையோரம் நின்றிருந்த டேங்கா் லாரியின் பின்புறம் இந்த சுமை ஆட்டோ மோதியதாம்.

தகவலின்பேரில் நாலாட்டின்புத்தூா் போலீஸாா் சென்று இடிபாடுகளுக்குள் சிக்கியோரை மீட்டனா். இதில், சிறுமி யாசிகா, பாஸ்கா் மனைவி சுமத்ரா (27) ஆகிய இருவரும் உயிரிழந்தனா். மற்றவா்கள் காயமடைந்தனா். அவா்கள் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, சுமை ஆட்டோ ஓட்டுநா் பாஸ்கரனிடம் விசாரித்துவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com