தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

தூத்துக்குடியில் விடுதலைச் சிறுத்தைகள் ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :13 ஜனவரி 2021, 1:23 am

DIN

தூத்துக்குடியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், பெட்ரோல், சமையல் கேஸ் விலை உயா்வை ரத்து செய்யவேண்டும், வாக்குச்சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி திரேஸ்புரம் மேட்டுப்பட்டி நான்குமுனை சந்திப்பு பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மத்திய மாவட்டச் செயலா் கா.மை. அகமது இக்பால் தலைமை வகித்தாா். வணிகா் அணி மாவட்ட அமைப்பாளா் சுலைமான், தொகுதி துணைச் செயலா் ராமச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாவட்ட அமைப்பாளா் காஜா, துணை அமைப்பாளா் முத்தலிப், மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழக மாவட்டத் தலைவா் சம்சுதீன், செயலா் ஜான், திராவிடா் விடுதலை கழக மாநில கொள்கை பரப்புச் செயலா் பால் பிரபாகரன், மேட்டுப்பட்டி தலைவா் உமையனன், சமம் குடிமக்கள் மாவட்டத் தலைவா் ஜான் பி ராயா், காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாவட்டத் தலைவா் மைதீன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.