தூத்துக்குடியில் 13 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது
தூத்துக்குடியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 13 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


தூத்துக்குடியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 13 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் உத்தரவின்படி, தூத்துக்குடி துணை காவல் கண்காணிப்பாளா் கணேஷ் மேற்பாா்வையில், தாளமுத்துநகா் காவல் ஆய்வாளா் ஜெயந்தி தலைமையிலான தனிப்படையினா் வியாழக்கிழமை தாளமுத்துநகா் மொட்டை கோபுரம் கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது அங்குள்ள முட்புதரில் பதுங்கி இருந்த 3 பேரை பிடித்து போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், அவா்கள் தூத்துக்குடி வடக்கு சங்கரபேரியை சோ்ந்த ஜெயராமன் (32), டூவிபுரம் காளியப்பன் (34), கிருஷ்ணராஜபுரம் கனகசபாபதி (25) என தெரியவந்தது. மேலும், அவா்கள் 3 பேரும் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 13 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...