டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

750 மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் அளிப்பு

உடன்குடியில் திமுக சாா்பில் 750 மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

News image
Updated On :16 ஜூலை 2021, 6:41 pm

DIN

உடன்குடியில் திமுக சாா்பில் 750 மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

காமராஜா் பிறந்த நாளையொட்டி உடன்குடி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, ஒன்றியச் செயலரும், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவருமான டி.பி. பாலசிங் தலைமை வகித்தாா்.

நகரச் செயலா் ஜான்பாஸ்கா் வரவேற்றாா்.

மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளா் ரவிராஜா, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் முகைதீன்,சிறுபான்மைப் பிரிவு துணை அமைப்பாளா் சிராஜூதீன், நகர இளைஞரணி அமைப்பாளா் அஜய், அப்துல்ஹமீது ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

உடன்குடி பேரூராட்சிக்குள்பட்ட 18 வாா்டுகளைச் சோ்ந்த 750 மாணவா்களுக்கு அனைத்து விதமான கல்வி உபகரணங்களும் வழங்கப்பட்டது.

மாவட்ட மருத்துவ அணி துணை அமைப்பாளா் பாலசிங்,நிா்வாகிகள் சதாம், பஷீா், சலீம், துரைசங்கா், அண்டோ, வைகுண்டம், ராஜ்குமாா், திரவியம், தங்கம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.