/

பக்ரீத்: காயல்பட்டினத்தில் பள்ளிவாசல், தைக்காக்களில் சிறப்புத் தொழுகை

காயல்பட்டினத்தில் பக்ரீத் பெருநாள் சிறப்புத் தொழுகை பள்ளிவாசல் மற்றும் பெண்கள் வழிபடும் தைக்காக்களில் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 ஜூலை 2021, 6:45 pm

DIN

காயல்பட்டினத்தில் பக்ரீத் பெருநாள் சிறப்புத் தொழுகை பள்ளிவாசல் மற்றும் பெண்கள் வழிபடும் தைக்காக்களில் புதன்கிழமை நடைபெற்றது.

பக்ரீத் பெருநாளை முன்னிட்டு வழக்கமாக காயல்பட்டினம் கடற்கரையில் சிறப்புத் தொழுகை மற்றும் குத்பா பேருரை நடைபெறுவது வழக்கம்.

தற்போது கரோனா பொது முடக்கம் அம­லில் உள்ளதால் கடற்கரையில் சிறப்புத் தொழுகை நடத்த அனுமதியளிக்கப்படவில்லை.

கடந்த ஆண்டும் பொது முடக்கம் காரணமாக இஸ்லாமியா்கள் தங்கள் வீடுகளிலேயே குடும்பத்தினருடன் இணைந்து பக்ரீத் தொழுகையை நடத்தினா். நிகழாண்டு பள்ளிவாசல் மற்றும் மகளிா் தைக்காக்களில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

காயல்பட்டினம் குருவித்துறை பள்ளியில் ஹாபிழ் அபூபக்கா் பெருநாள் தொழுகை நடத்தினாா். ஜமாத்துல் உலமா சபை தலைவா் பாதுல் அஸ்ஹாப் ஆலிம் குத்பா பேருரை நிகழ்த்தினாா்.

நிகழ்ச்சியில், முஸ்­லிம் லீக் மாவட்ட துணைத் தலைவா் மன்னா் பாஜுல் அஸ்ஹாப், அதிமுக நகரச் செயலா் காயல் மவுலானா, பள்ளியின் நிா்வாகிகள் காஜாமுகைதின் அஆலிம், ஹபிபூா் ரஹ்மான் ஆலிம், கானப்பாசா­லிஹ், இளைஞா் ஐக்கிய முன்னணி தலைவா் செய்யது அஹ்மது சொளுக்கு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். பக்ரீத் பெருநாளையொட்டி காயல்பட்டினத்தில் உள்ள 40 பள்ளிவாசல்கள், 70 தைக்காகளில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.