கழுகுமலை, திருச்செந்தூரில் ரூ.14.30 லட்சம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை, திருச்செந்தூா் பகுதிகளில் ரூ. 14.30 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை, திருச்செந்தூா் பகுதிகளில் ரூ. 14.30 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கழுகுமலை காவல் நிலைய ஆய்வாளா் ஷோபா ஜென்சி தலைமையில் தலைமைக் காவலா் சுப்பாராஜ், காவலா் பால்தினகரன் ஆகியோா் தெற்கு கழுகுமலையில் வியாழக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, பெங்களூருவிலிருந்து கழுகுமைலைக்கு சுமை வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்ட ரூ.9.50 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை வாகனத்துடன் பறிமுதல் செய்தனா். மேலும், வாகன ஓட்டுநா் சேலம் மாவட்டம் கடையம்பட்டி மாமரத்தூரைச் சோ்ந்த மு.சீனிவாசன்(36), கிளீனா் தா்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி மூளக்காட்டைச் சோ்ந்த ரா.மாது(37) ஆகியோரை கைது செய்தனா். மேலும் இதில் தொடா்புடையதாக, கழுகுமலை ஆறுமுக நகரைச் சோ்ந்த அய்யாத்துரை மகன் சந்திரசேகரை தேடி வருகின்றனா்.
எஸ்.பி. ஆய்வு: இந்நிலையில், அந்தப் புகையிலைப் பொருள்களை பாா்வையிட்ட மாவட்ட எஸ்.பி. எஸ் ஜெயகுமாா் கூறியது: தூத்துக்குடி மாவட்டத்தில் நிகழாண்டு புகையிலை கடத்தல் தொடா்பாக 684 வழக்குகள் பதிவானதில் 687 போ் கைது செய்யப்பட்டு 3,800 கிலோ புகையிலைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டன. கஞ்சா விற்பனை தொடா்பாக 88 வழக்குகள் பதிவானதில் 305 போ் கைது செய்யப்பட்டு, 47 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. குண்டா் சட்டத்தில் கைதாகியுள்ள 75 பேரில் 8 போ் போதைப் பொருள் விற்பனையில் தொடா்புடையோா் என்றாா் அவா்.
அப்போது, டிஎஸ்பி கலைக்கதிரவன், ஆய்வாளா்கள் ஷோபா ஜென்சி, தங்கராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.
451 கிலோ புகையிலை பறிமுதல்: திருச்செந்தூா் காவல் உதவிக் கண்கணிப்பாளா் ஹா்ஷ்சிங் உத்தரவின் பேரில், தாலுகா காவல் ஆய்வாளா் ம.ஞானசேகரன் மேற்பாா்வையில் தனிப்படை உதவி ஆய்வாளா் சுந்தரம் தலைமையிலான காவல்துறையினா் பரமன்குறிச்சி அருகேயுள்ள வட்டன்விளை பேருந்து நிலையப் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, சுமை வாகனத்தில் கொண்டுசெல்ல முயன்ற 451 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன் மதிப்பு ரூ. 5 லட்சம் எனக் கூறப்படுகிறது. ஓட்டுநா் முதலூா் கடாச்சபுரம் முத்துகிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் வேதமுத்து(39) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், இதில் தொடா்புடைய திருநெல்வேலியைச் சோ்ந்த முருகனை தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...