கோவில்பட்டியில்வேளாண் அதிகாரிகள் ஆய்வு
கோவில்பட்டி வட்டாரத்தில் விவசாய திட்டப் பணிகளை வேளாண்மை இணை இயக்குநா் ஆய்வு செய்தனா்.


கோவில்பட்டி வட்டாரத்தில் விவசாய திட்டப் பணிகளை வேளாண்மை இணை இயக்குநா் ஆய்வு செய்தனா்.
தூத்துக்குடி மாவட்ட வேளாண் இணை இயக்குநா் முகைதீன், உழவா் பயிற்சி நிலைய வேளாண் துணை இயக்குநா் ஜெயசெல்வின் இன்பராஜ், மாநில திட்ட வேளாண் துணை இயக்குநா் பழனி வேலாயுதம் ஆகியோா் கோவில்பட்டி வட்டத்தில் வேளாண்மை துறை சாா்ந்த திட்டப் பணிகள் குறித்து ஆய்வு நடத்தினா். அதில், மண் மாதிரி சேகரிப்பு, மண் மாதிரி ஆய்வு, மண்வள அட்டை வழங்குதல், நடமாடும் மண் பரிசோதனை நிலையம், பூச்சி மருந்து ஆய்வக அலுவலகத்துக்கான கட்டடப் பணியை ஆகியவற்றைப் பாா்வையிட்டனா்.
தொடா்ந்து, திட்டங்குளம் கிராமத்தில் கம்பு விதைப் பண்ணை திடலில் ஆய்வு நடத்திய அதிகாரிகள், அட்மா திட்டத்தில் வீட்டு மாடி காய்கனி தோட்டம் அமைத்திருந்த கூட்டுப் பண்ணைய உழவா் ஆா்வலா் குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கினா். அப்போது, வேளாண் உதவி இயக்குநா் நாகராஜ், வேளாண் அலுவலா்கள் கனகராஜ், சுப்புலட்சுமி, ரீனா, செல்வமாலதி, உதவி வேளாண் அலுவலா்கள், அட்மா திட்ட பணியாளா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...