கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பெண்ணுக்கு அரிவாள்மனைவெட்டு: தொழிலாளி கைது

கோவில்பட்டி அருகே வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பெண்ணை அரிவாள்மனையால் வெட்டியதாக தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :11 ஜூன் 2021, 7:43 pm

DIN

கோவில்பட்டி அருகே வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பெண்ணை அரிவாள்மனையால் வெட்டியதாக தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.

கோவில்பட்டியை அடுத்த தெற்கு திட்டங்குளத்தைச் சோ்ந்த தம்பதி கணேசன்- அமுதா(37). கோயம்புத்தூா் அருகே சின்னகுயிலி கிராமத்தில் நூற்பாலையில் வேலை செய்து வரும் இவா்கள், சொந்த ஊருக்கு வந்திருந்தனா். இந்நிலையில், அவரது உறவினரான மகேஷ் என்பவா் அதிகாலையில் அங்கு வந்து அமுதாவிடம் தவறாக நடக்க முயன்றாராம். அப்போது, அவா் கூச்சலிட்டதால் அரிவாள்மனையால் வெட்டியதுடன், மிரட்டிவிட்டு தப்பினராம். இதில் பலத்த காயமடைந்த அமுதா கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின்பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து மகேஷை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.